ஜெயம் தங்கராஜா

கவி 642

வாழ்ந்த சுவடுகள் 

வாழ்ந்திட்ட மூத்தோரின் அறிவுரையைக் கேளு
வருங்காலம் வசந்தத்தை சேர்க்குமங்கு பாரு
ஆழ்ந்து இதை சிந்தித்தால் உண்மையங்குண்டு
அவர்களையே நிழலாகத் தொடர்வதிங்கு நன்று
வீழ்ந்தவர் எவரென்று உற்றுநோக்கி
பாரிங்கு
விடையங்கு கிடைத்துவிடும்  முதியோரை மதியாதாரவரென்று
மூழ்கி முத்தெடுக்க வாழ்க்கைக் கடலில்
மறக்காது பெரியோரின் கருத்துக்களைப் பேணு

முன்னோர்கள் அனைத்திலுமே சிறந்துமே விளங்குபவர்கள்
மரியாதை ஒழுக்கங்களை தன்னகத்தே கொண்டவர்கள்
கண்களாக மொழியையும் பண்பாட்டையும் பார்ப்பவர்கள்
காலங்களை இயற்கையாக மெய்யாகக் கழித்தவர்கள்
உண்மையிலே அனுபவம்பெற்ற பழுத்த மரங்கள்
உறவுகளில் முதியவர்கள் நம் பெரியவர்கள்
இன்றைய குழந்தைகளிற்கு வழிகாட்டும் வாழ்ந்துகாட்டிகள்
இந்தத் தலைமறை சம்பாதிக்கவேண்டிய சொத்தவர்கள்

இழக்கும் வரை அவரருமை புரிவதில்லை
இறந்தவுடன் உண்மைதானது என புலம்பும்நிலை
பழகுவதற்காக அவர்கள் ஏங்கித் தவிக்கின்றார்கள்
பழசுகள்தானே அவர்களென ஓரங்கட்டலாமா ஒதுக்கலாமா
அளவில்லாத அன்பை அள்ளித்தர ஏங்குகின்றார்கள்
அவர்களின் உணர்வுகளை மதிப்பது கடமையன்றோ
குலம் காத்துநின்ற குலசாமிகள் அவர்கள்
கூடவிருந்தே மூத்தவரை பார்த்தவரை கொண்டாடுவோமே

ஜெயம்
28-02-2022

Nada Mohan
Author: Nada Mohan