இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

https://linksharing.samsungcloud.com/kYJ4tgv0N3uN

சசிச

விடியல்

இன்னும் மாதர்க்கு வரவில்லை விடியல் 
பெண்களின் வாழ்க்கையின்னும் ஆண்களின் பிடியில்
மண்ணிலே சிலரின்னும் அரக்கர்கள் வடிவில்
இன்றும் உரிமைகளில்லை என்பதாக முடிவில்

பாட்டிலே மானே தேனேயென புழுகிடுவார்
ஏட்டிலே புகழ்ந்து போற்றி எழுதிடுவார்
வீட்டிலே அடங்கி வாழும் பிறவியானாள்
கூட்டிலே அடைபட்டுக் கிடக்கும் பறவையானாள்

கேளடி பெண்ணே நீயுன்னையே புரிந்தால்
ஏழடியாகும் இமயமும் நீ நிமிர்ந்தால்
ஆளப் பிறந்த பூலோகத்தின் ஜென்மம்
வாழப் பயந்து ஏங்குவதுமேன் இன்னும்

நிலவென்பார் மலரென்பார் சிலையென்பார் மயங்கிடாதே
அழகென்பார் அமுதென்பார் அவர்கழுக்கு இடங்கொடாதே
அளவில்லா பொய்யுரைப்பார் உணர்வுகளுள் உடைந்திடாதே
உளத்திலுள்ள நம்மிக்கையை எந்நாளும் கைவிடாதே

புதுமைப்பெண் என்பதுவும் சொல்லளவில் மட்டும்
பதுமையவள்  உளக்குமுறல் யார்செவிக்கு எட்டும்
இதுவரையில் கிடைக்கவில்லை சரிக்குச்சரி உரிமை
எதுவரைக்கும் சுமப்பாளோ பேதையவள் சிலுவை.

ஜெயம்
20-03-2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading