ஜெயம் தங்கராஜா

சசிச

சுடர்

மாயிருள் போர்வையை அகற்றி விடும்
பேயிருக்கும் கண்டு இதனை போயிருக்கும்
ஞாயிறு உண்டாக்கிடும் பகலை செங்கதிரால்
தேயினும் உருக்கி பெருக்கிவிடும் நிலவும்

சோதிமயமானவரே இந்த பிரபஞ்ச நாயகன்
ஆதி முதலாய் முன்னோர்களின் இறை
மோதினால் சருகுகளை பஸ்பம் ஆக்கிவிடும்
மேதினியின் செல்வமே இருளகற்றும்  விளக்கு

ஒரு பொருள் உருக வேண்டுமானால்
பெருக வேண்டும் ஒளியும் அதனால்
துருவப் பனியும் மெழுகனவே கரையும்
திருமந்திரத்திலும் இருக்கின்றது அக்கினியின் உரையும்

உள்சூடும் மிகுந்தால் உடம்பும் இளைத்துவிடும்
இல்லாமல் வெப்பம் செரிமானமும் பசியுமில்லை
தொல்லை தரவெனவே குளிரும் அடம்பிடிக்கும்
சொல்வேனொன்று சுடர் இரையாகின்றது இறையுமாகின்றது

ஜெயம்
09-04-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading