தண்ணீரிற்காய் திரளும் போர் மேகங்கள்

ராணி சம்பந்தர்

மண்ணிற்கும் விண்ணுக்குமே
மழை நீரில் ஏணிகட்டி குதூகல
கொண்டாடத் தண்ணீரிற்காய்
திரளும் போர் மேகங்கள் தாகம்

சுழலும் பூமிப் பந்தின் அதிக நீர்
பரப்பின் கதாநாயகன் கடல் துளி
வெப்பநிலை மாறிட ஆவி மேலே
உருளும் வேகம்

முட்டி மோதிக் களைத்த கருமேகம்
பட்ட குளிரில் கரைந்து மழைநீராக
மண்ணிற்குள் கொட்டும் மோகம்

நீரின்றி வாடும் பயிர் போல உயிரும்
உடலை விட்டு ஓடும் சோகம்
பாரினில் நீரின்றி எதுவும் அசையாது
இதுவே நன்மையும் தரும்
அதுவே அள்ளிக் கொட்டும் மழை
வெள்ளமதில் தீமையும் வருமே .

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading