“தண்ணீரிற்காய் திரளும் போர்மேகங்கள்”

நேவஸ் பிலிப் கவிஇல(583)

இயற்கையின் வளங்களை
அழித்ததால் மழை மறைந்து
மண்ணின் வளம் குறைந்து
மீண்டும் ஊற்றானது தண்ணீர்
மனித கண்களில் கண்ணீராய்

ஈனோரின் தன்நலத் தேடலிலே
இழிவான செயல் பல புரிந்தோரால்
செழிப்பான கனிம வளம் களவு போக
வருகின்ற மழை மேகம் எங்கோ தொலைய

போர் மேகம் சூழ கார் மேகம் கலைய
வான்பரப்பில் நச்சுப் புகை மூட்டம்
நாடெல்லாம் விஞ்ஞான ஆதிக்கம்
நாசமாகிப் போனது மழை மேகம்

பனியில்லை நீரில்லை மழையில்லை
வாழ்வே இல்லை என்றாகும் நிலையாகுதே
மண்ணின் முகம் பார்த்து
மழைபொழியும் மேகமே
கருணை மழை பொழியாயோ
வாடும் உயிர்களுக்கு வளமான
வாழ்வமைய,,,,,,,,,,,
நன்றி…….

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading