தண்ணீருக்காய்திரளும்போர் மேகங்கள்

செல்வி நித்தியானந்தன்
தண்ணீருக்காய்திரளும்போர் மேகங்கள் (755) 26.03.2026
:உயிரின் அவசியம்
உலகில் என்று
உன்னத தேவையாய்
நித்தியம் நன்று
உயிரிடை மருந்தாய்
பலருக்கு இன்று
உலகில் கிடைப்பதும்
அதீத ஒன்று

:கோடை வந்தாலே
நீருக்கு பஞ்சம்
ஜாடை காட்டி
நடைபயண தஞ்சம்
பீடை பிடித்திடும்
உயிரின் இழப்பு
வாடை வந்திடும்
நீரின்றி பிழைப்பு

நீருக்காய் மேகமும்
திரண்டு வரவே
வேகமாய் மண்ணிலே
மழையாய் பொழியவே
தாகமாய் உயிர்களும்
பருகி மகிழவே
தந்ததே மனதினில்
மகிழ்வும் வந்திட

கருவறை காத்திடவும்
கல்லறை கட்டிடவும்
நீரின்றி அமையாத
இவ்வுலகு.உண்டோ

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading