தாயின்றி நாமில்லை.!

தாயின்றி நாமில்லை.!

பூமித்தாய் என்று சொல்லும்
புவிகூடத்தாய் தானே-வானில்
பொட்டதுபோல் சுற்றிவரும்
நிலவுகூட பெண்தானே

நீலத்தால் சாறிகட்டி நிலம் காக்கும்
கடல் அவளும் தாய் தானே
நித்திலத்தில் தாய்க்கு நிகர்-எதுவும்
இல்லை என்பேன் சரிதானே.

சிந்து,கங்கை,யமுனை,சரஸ்வதி
சித்தப்பா ப்பிள்ளைகளா?
காவேரி,குமரி,கோதவரி,நர்மதா.
பெரியப்பா பிள்ளைகளா?

இல்லை இல்லை இயற்கை
ஈண்றெடுத்த நதித் தாய்கள்
இவைகளும் பெண் பெயாரால்
உயிர்த்தார்கள்.

பூமிதன்னில் பெண்ணினமே
இல்லையென்றால்
போட்டியிடும் ஆண்களெங்கே?
பொறுமையெங்கே?

ஆணினம்தான் அகிலத்தில்
தனித்திருந்தால்
அன்பு எங்கே? காதல் எங்கே?
இனிமை எங்கே?

கற்பனைக்கு பெண் இனமே
இல்லையென்றால்
கவிஞரெங்கே?கலைஞர் எங்கே?
கலைதானெங்கே?

கர்ப்பத்தில் எமைத் தாங்கி
வளர்க்காவிட்டால்
கல்வியெங்கே? கருணையெங்கே?
காசினிதானெங்கே?

பொன்னுலகம் பெண்
இனத்தை மறந்திருந்தால்
புதுமையெங்கே,புலமையெங்கே
புரட்சியெங்கே?

மண்ணகமும் வாழ்வதற்காய்
படைத்து தந்த
மாதவத் தாய்யினத்தை
மதித்து வாழ்வோம்.

அன்புடன் -பசுவூர்க்கோபி.
ஐயாக்குட்டி கோவிந்தநாதன்.
நெதர்லாந்து.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading