தியாகராஜா யோகேஸ்வரன்.

வாழ்வே பேறாகும்..!
– தியாகராஜா யோகேஸ்வரன்.
(கவிதை – 2)

தனி தனியாக பிறந்தோம். மழலை மொழி பேசினோம். தாயின் இசை தாலாட்டில் தூங்கினோம். தந்தை மடியில் தவழ்ந்து விளையாடினோம். எடுப்பார் கை பிள்ளையாக குதூகலித்தோம். கிறுக்கி வரைந்து வித்தியா விருத்தி கண்டோம். எண்ணி எண்ணி பார்த்து விரல்கள் பத்தானதே. அரிச்சுவடி அச்சரங்கள் கைவண்ணமானதே. ஓடிவிளையாடி பாப்பாக்களாய் குதூகலித்தோமே.அறிவு முன்னேற்றப் பாதையில் காலடிகள் நடைபோட்டதே. அன்பு பாசம் உறவு பரிணாமம் பெற்றோம். வாழ்விலே சேவை செய்திட உறுதி பூண்டோம். பள்ளிகள் சென்று புள்ளிகள் பெற்றோம். தரம் பிரிந்து பல கலைகள் கற்றிட ஞானம் வந்தது. குறி வைத்து படித்து பல திசைகள் சென்றோம். இளமை கல்விகளின் அடிப்படை வழி சமைத்தது. அவரவர் ஆசைகள் முயற்சிகள் திருவினை தந்தது. பதும வயதும் கழியவே பொறுப்பாய் படித்து உழைக்க வழியும் வந்தது.

– நன்றியுடன்
தியாகராஜா யோகேஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading