மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

தியாக தீபம் திலீபன்

சக்தி சிறினிசங்கர்

ஊரெழு மண்ணில் உதித்தவன் உலகத்தில்
பேரெழுதிச் சென்றவன் பெருந்தியாகம் செய்தே
பாரும் வியந்திடப் பார்த்தீபன் பசித்திருந்தான்
சோராது சென்றவன் சோர்ந்து போகிட
ஊரும் உலகமும் உணர்விலே உறைந்திட ஈராறு நாட்கள்
இருந்தான் இன்றும்
தீராத சோகமாய்த் தீலீபனின் மரணம்!
தன் சுகம் மறந்து தன் இன சுமை சுமந்தான்
வாழ்வினைத் துச்சமென எண்ணி
அச்சமின்றித் தாயகமண் மீட்க
ஐந்தம்சக் கோரிக்கை முன் வைத்தான்
உயிர் உருக உருக மெழுகுவர்த்தியானான்
ஊரெழு அன்னையின் தவப்புதல்வன்
அவன் கனவுகள் நனவாகும்வரை
பசித்திருக்கிறான் இன்றும்!

நன்றி வணக்கம்!

ஈராறு நாடாகள்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading