இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

திருமதி. அபிராமி.

09.05.2023

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -221
தலைப்பு ! ( அறுசீர்விருத்தம் )
“காணி”
வனமது தாயக காணி
வளமும் நிறைந்த பூமி //

தனமது கையிலும் இல்லை
தங்கவோர் இடமில்லா தொல்லை

இனத்தவர் சிலரும் சேர்ந்து
இரவுபகல் விட்டினர் சோர்ந்து

கனத்த உழைப்பின் பாணி
கண்ணில் பட்டது காணி

வெட்டிய காணியின் வீடு
வேதனை நிறைந்த கூடு

பட்டினி பஞ்சம் ஊடே
பணியின்றி தவித்தது நாடே

கட்டிய கனவுக் கோட்டை
கரைந்தது உயிர்பலி வேட்டை

விட்டுப் பிரிந்தோம் நாட்டை
விடிவுவரை விடைகொடுக்க
மாட்டோம் //

கவித்திறனாய்வு மிகமிக நேர்த்தி.
போற்றுதல் பாராட்டுக்கள் பாவை அண்ணா…🙏🏻மற்றும் .. கவிஞர் பாலரவி அவர்களுக்கும்🙏🏻

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading