திருமதி செ.தெய்வேதிரமூர்த்தி

வணக்கம் அண்ணா.
விருப்பத் தலைப்பு:-
வெய்யோனே சீற்றமும் ஏனோ?…

அறுசீர் விருத்தம்

சீர் வரையறை..

விளம் விளம் காய்
விளம் விளம் காய்..

சூரியோய் கொட்டிநீ சூழ்நெருப்பைச்
சோகமும் தந்திட எண்ணியதேன்
பாரிடை மாந்தருன் பயிலரங்கா
பண்பினை விற்றதன் பாதகமா
மாரியள் செய்தநற் கொடையனைத்தும்
மண்மகள் வீட்டினுள் வைத்தனளே
வேரிடை ஓடியென் தேடுகிறாய்
வெம்பியே பூந்தளிர் வாடுதுபார்

காரிருள் ஆயினும் கனலகற்றாக்
காவியச் சாதனை போற்றுகின்றோம்
வாரியே தந்தெமை வறுத்தெடுக்க
வல்லமை தந்ததார் சூரியரே
பாரியைப் போலொரு எண்ணமிதோ
பார்த்திடப் பல்கதிர் பாய்ச்சுகின்றீர்
கூரிய வெம்மைகண் டோடுகின்றார்
கூட்டினுள் குஞ்சுகள் பாவமன்றோ!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading