தீதும் நன்றும்

நகுலா சிவநாதன்

தீதும் நன்றும்

தீதும் நன்றும் திடமுடனே
தீங்கே இல்லா வாழ்வினிலே
ஓதும் மறையும் ஒளிபோலே
உளமே ஏங்கும் நனிநன்றே
மோதும் வாழ்வில் துன்பங்கள்
மோதி வந்து சென்றாலும்
காதும் கண்ணும் வைத்திங்கும்
காலம் முழுக்கப் பேசாதீர்

ஞாலம் போற்றும் வாழ்வினிலே
நன்மை செய்து வாழ்வோமே
காலம் போற்றும் நற்பெருமை
கனிந்து வாழ்வில் பெருகிடவே
பாலம் போடும் பண்பாடு
படந்து வாழ்வில் சேர்ந்திங்கு
தூலம் போடும் பொற்கதிராய்
துணிவை ஏற்றி துலங்கிடுக!

நகுலா சிவநாதன் 1763

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading