” துளிர்ப்பாகும் வசந்தம் “

ரஜனி அன்ரன் (B.A) “ துளிர்ப்பாகும் வசந்தம் “ 03.04.2025

வண்ணக் கதிரவன் ஒளிவீச
வாடையும் மெல்ல விலகிட
தருக்களெல்லாம் கருக்கொள்ள
மொட்டுக்கள் முகையவிழ்த்து
மலர்வனமாய் வனப்பூட்டும் வசந்தம்
மனதிற்கு மகிழ்வூட்டும் தருணம் !

வசந்தம் துளிர்ப்பானால்
வாழ்வு முழுமையும் புதுமையே
துளிர்க்கும் இலைகளும் இசைபாட
துள்ளிக் குதிக்குமே மனமும்
பச்சை கனிந்து மலர
இச்சை கொள்ளுமே மனமும் !

பனித்துளிகள் மலர்களை நனைக்க
பட்சிகள் இராகம் இசைக்க
மலர்கள் திறந்து முகம்காட்ட
மழைத்துளியும் மலர்களை முத்தமிட
பூமகள் மேனியைப் பூக்களும் அழகாக்க
மேதினியே ஜொலிக்குது வசந்தத்தாலே
துளிர்ப்பாகும் வசந்தம்
நல்மனங்களை வனப்பாக்கட்டும் !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading