தேடும் உறவுகளே…

ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே…. 28.08.2025

தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின் உச்சக்கட்டம் உறவுகளைத் தேடும்படலம்
பாசவலையாகிக் கடந்தது பதினாறுஆண்டுகள்
தேடும் உறவுகளைத் தேடித்தேடி
தேகமே நடைப்பிணமாகிய வேளை
புதைகுழிக்குள் எச்சங்களும் உறுதியாகிட
தேடும்உறவுகளின் கனவுகளும் கானலானதே !

தேடும் உறவுகளே உம்தேகங்களை
குழிதோண்டிப் புதைத்தாலும்
உண்மைகளை உணர்வுகளை
ஒருபோதும் புதைக்க முடியாதே
ஒருநாள் நீதியின் கதவுகளை தட்டுமே ஆத்மாக்கள்
அப்போது கண்ணீருக்கும் விடைகிடைக்குமே !

எச்சங்கள் மீதமாய் கிடந்தாலும்
மிச்சமாய் துடிக்குது நியாயம் கேட்கும் இதயம்
ஒவ்வொரு எலும்பும் ஒருகதை சொல்லும்
மெளனங்கள் முழங்க உணர்வும் சாட்சியாகுமே !

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading