மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

நகுலா சிவநாதன்

கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்

தண்ணீரில் நிறையும் கழிவுகள்
தளராத பெருந்துன்பம் தருகிறதே!
மண்மீது வாழ்வும் கண்ணீரில் கரையுதே
மனங்களிலே மகிழ்வு விடைபெற்றுப் போகிறதே

கரையும் நீரில் கழிவுகள் நிறைவு
உறையும் பனியும் தடுக்கிறது ஓட்டத்தை
திரையும் மோதும் கடலினிலே
தீரா குப்பை சேர்வதில் துன்பமே!

வாழும் மானிடா ஒருமுறை கேள்!
தாழும் மனித வாழ்வு சகதிக்குள்ளேயா??
வீழும் கழிவும் வீணாய் கொட்ட
கடலின் மட்டமும் கடுகதியாய் உயருதே!

தண்ணீரில் தவளும் குப்பையும்
நன்னீரைப் பாழாக்குதே
மண்ணீரின் வளமெல்லாம்
கண்ணீரில் கரையுதே!

நகுலா சிவநாதன்1715

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading