நகுலா சிவநாதன்

கல்லறை வீரரின் கனவிதுவோ!

கல்லறை வீரரின் கனவிதுவோ
சொல்லறையில் விழுந்த செய்தி
தாயக விடுதலை ஒன்றே தாகமாய்
தரணியில் போராடிய வீhர்கள்

விடிந்தும் விடியாத வீரராய்
மண்ணிலே களமாடிய தியாகங்களே!
நாட்டு விடுதலையை காட்டமாய் நேசித்து
தேட்டத்தை தேசத்திற்காய் ஆகுதியாக்கினீர்

கல்லறையில் உறங்கினாலும் உங்கள்
கனவு மண்மீட்பு மட்டும்தான்
வீர தியாகங்களாய் விண்ணுலகில் சென்றாலும்
தீரமாய் களமாடிய வேங்கைகளே!
மடிந்தும் மடியாத மாவீரரே!
கல்லறையில் வித்தானாலும்
கனவு தாய்மண்மீட்பே!

நகுலா சிவநாதன் 1740

Nada Mohan
Author: Nada Mohan