12
Feb
உயிரான உறவு
நகுலா சிவநாதன்
உயிரான உறவு
உயிரான காதல் உளத்துக்காதல்
பயிராக வளரும் பண்பாட்டுக்காதல்
நிலவாக உலவும் நித்தியக் காதல்
நீண்டு...
கடந்த காலம் கடந்து போனதே
நடந்த கவலை மரணம் துன்பமானதே
எதிர்காலம் என்ன நடக்கும் நினைவிலே
பயமே காரணமாக அலை மோதுதே
நிகழ்காலம் தற்போது நினைவில் வரவே
நிழலாடும் நினைவுகள் ஆயிரமானதே
நிம்மதி தேடி அலையும் மானிடமோ
உள்ளம் எனும் கதவை திறக்க வேண்டுமே
தூய்மையின் துல்லியமாய் துலங்கி நின்று
வாய்மையின் வல்லமையால் விளங்கி
குறைகளை காண்பதில் குறியாயிராமல்
நிறைகளை காண கண் திறப்போம்
சந்தித்த சவால்களுக்கு சலிக்காமல்
எதிர்ப்புகள் ஏளனங்களை எதிர்கொண்டு
அன்பின் சுனையாய் வாழ்வாங்கு வாழ்வோம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.