நிழலாடுதே. நினைவாயிரம்………

இரா.விஜயகௌரி

நிழலாடும் நினைவுகளுள்
நின்றாடும் மன அலைகள்
விழியோரம் நீர்த்திவலை
விழுங்கி எழும் உறவின் மொழி

சுழன்றோடும் கால.நதி
சுவைத்தெழுந்த வாழ்வின் நிலை
அகம் நிறைத்த அன்பெழுதும்
அணைத்தெழுந்த எழிலின் துளி

எதை நினைப்பேன் எதை விடுவேன்
பாலக பருவத்துள் பேர்ர்களின் வாஞ்சை
பள்ளித் தோழர்களின் நேசம்
உதிரம் தொடுத்தெழுந்த உறவு

மீளெடுத்து அசை போட்டால்
அத்தனையும் உயிர் தொடுக்க
கடந்து வந்த பாதைகளின் கரைதனிலே
எச்சங்களாய் நினைவுப் பொக்கிஷ ங்கள்

நிழலாடுதே நெஞ்சுள் கண்ணீருள்
நினைவாயிரம் ஆயிரமாய்………

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading