தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நூற்றாண்டுவிழாக் கண்ட மாதரசி

ரஜனி அன்ரன்

“ நூற்றாண்டுவிழாக் கண்ட மாதரசி “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 16.01.2025

நெற்றியில் திருநீறு நேர் கொண்ட பார்வை
கணீரென்ற குரல் கம்பீரமான பேச்சு
கருணை கொண்ட தாயுள்ளம்
இத்தனைக்கும் சொந்தக்காரி
எங்கள் சிவத்தமிழ்ச் செல்வி
தைத்திங்கள் ஏழினில்
நூற்றாண்டு விழாக் கண்டாரே !

அன்னையர்களுக்கெல்லாம் அன்னை
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்புத்தாய்
ஆன்மீக சொற்பொழிவின் வித்தகி
ஆலயத்தின் அறங்காவலர்
ஆன்மீகப் பாதையின் வழிகாட்டி
அன்னை சிவத்தமிழ்ச் செல்விக்கு
அன்னபூரணி மண்டபத்தில்
ஆறுதிருமுருகன் தலைமையில்
அழகாய் அரங்கேறியதே நூற்றாண்டுவிழா !

தமிழுக்கு கிடைத்த தனிப்பெரும் சொத்து
மாதர் குலத்தின் மணிமகுடம்
மதங்கள் கடந்த மானிட நேசிப்பின் தாய்
சக்தியிலும் பக்தியிலும் மிஞ்சிய பக்தை
ஆசிரியப்பணி அருந்தமிழ்ப்பணி அறப்பணியென
அன்னையின் பணிகளோ அளப்பெரியதே

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading