மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நேவிஸ் பிலிப்.

கவி இல(97) 06/04/23
அநீதித் தீர்ப்பு

குவலயத்தின் பெரும் பரப்பில்
கண்டனங்கள் ஏராளம்
சுரந்து வரும் கொடுமைகளும்
கோபங்களும் தாராளம்

பெண்கள் குழந்தைகள்
நோயாளர் முதியோரும்
நிம்மதி இழந்தோராய்
முடங்கிக் கிடக்கின்றனர்

மானிடநேய அன்பை
இதயத்தில் சுமந்தவராய்
காருண்ய பண்புகளை
பார்மீது படர விட

நேர்மை நியாயங்கள்
வேரூன்றிப் படர்ந்திடவே
நாவினிக்கும் வார்த்தைகளாய்
போதனைகள் பகர்ந்தாரே

நியாயங்கள் நேர்மைகள்
வரண்டு போன கொடுங் கோலர்
வக்கிர வன்முறையை மூல தனமாக்கி
அநீதித் தீர்ப்பெழுதி நல்லாயனை
சிலுவையில் அறைந்து கொன்றாரே
நன்றி வணக்கம் ..

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading