அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

பசுமையான நினைவுகள்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-39
24-10-2024

பசுமையான நினைவுகள்

பசுமையான நினைவுகள்
பசுமரத்தாணிப் பதிவுகள்
ஆடிப்பாடி விளையாடிய தருணங்கள்
அகம் குளிர்ந்த காலங்கள்

ஒரு வீட்டில் அடுப்பெரித்து
ஊரெல்லாம் பசியற்று
உறவெல்லாம் ஒன்றாய்க் கூடி
உலக நடப்பறியும் பொற்காலம்!

நண்பி வீடும் என்வீடாய்
நல்லது கெட்டது பகிர்ந்து
குடையை மடக்கி மழையில் நனைந்து
குதுகலமாய் வாழ்ந்த காலமது!

மரத்திலேறி பழம் பறித்தோம்
மாடு கன்று மறித்து நின்றோம்
உடன்பிறப்பின் உதவியெல்லாம்
நிழலாய் வருமே எம்முடனே…

தாத்தா பாட்டி உறவெல்லாம்
தங்கமாய் காத்து வந்தோம்
உற்றார் உறவுகள் கூட
ஊர் போற்ற மதித்து நின்றோம்

வீதிப் பிரச்சனை ஏதுமென்றால்
வீடு வந்திடும் எமக்குமுன்
தந்தை முகத்தின் கண்டிப்பில்
தயங்கி தாயை அணைத்திடுவோம்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading