வரமாகும் வாய்ப்புகள்
-
By
- 0 comments
வரமாகும் வாய்ப்புகள்
-
By
- 0 comments
பாலதேவகஜன்
சிந்தையெல்லாம் நிறைந்தவளே!
சிந்தையில் உனை இருத்தி
சிரம்தாழ்த்தி வணங்குதற்கு
சிறப்பான நாள் எதற்கு என்
சிந்தையெல்லாம் நிறைந்தவளே!
காலம் குறித்து உனை வணங்க
என்னை கடந்து போனவள் அல்ல நீ!
காலம் காலமாய் எனக்குள்ளே
கலந்து கிடக்கின்ற கனதியானவளே நீ!
காலம் எமை பிரிக்க கொடிய நோயை
காலன் உன்னில் விதைக்க
கோலமிழந்து குறுகிப் போனவளே!
என் காலம் முளுவதும் உன் கோல நினைப்பே!
ஆயிரமாயிரமாய் உறவுகள்
அவரவரில் எவரிலுமே இல்லை
உனைப்போல உணர்வுகள்
எனை காத்து வளர்த்த தேவதையே!
என் கண்முன்னே உனதுயிர்
பிரிந்திட்ட கணங்களை
நினைத்து நினைத்து அழுகின்றேன்
நிஜத்து வாழ்வை வெறுக்கின்றேன்.
எத்தனை கனவோடு என்னை நீ!
வளர்த்து வந்திருப்பாய்
அத்தனை கனவுகளையும்
நிறைவேற்றும் தகுதியோடு
இன்று நான் வளர்ந்திருக்கின்றேன்
நிறைவுகாண நீயும் இல்லை
நிம்மதியாய் நானுமில்லை.
அம்மா ! உன் நினைப்போடு
ஆயுள் முளுவதும் வாழ்வேன்
எனது ஆயுள் முடிவிலும்
உனது அன்பையே தேடி
ஓடி வருவேன். அதுவரை
உன் பிரிவுப் பெருவலியோடு
வாழ்வை கடப்பேன் நான் அம்மா!
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments
-
By
- 0 comments