பாலதேவகஜன்

சலவை

உன் நினைவை
சலவை செய்தே பார்க்கிறேன்
என் நிலையில் கொஞ்சம்
மாற்றம் கேக்கிறேன்.

நீளும் வாழ்வில்
நீ! நீங்காதிருக்க
என் நெஞ்சம் தவித்து
நிலையினை இழக்க

கொஞ்சம் கருணை
கொண்டிடா காலம்
வஞ்சத்தில் எனையே
வாரியே போட்டது

உன்னத நேசம் உச்சம் பெற்றதாய்
உறுதியாய் இருக்க என்
உணர்வில் ஏதோ உறுத்தல்
உன் உறவு காட்டிய விரிசல்.

அரும்பும் வேளை
கரும்பாய் இனித்தேன்
மெருகும் தறுவாய்
மெதுவாய் கசந்தேன்

காரணம் எதுவென்று புரியவில்லை
காரியம் எதுவென்றும் உணரவில்லை
காலம் கரைத்தே கண்ணீர் வடித்தேன்
காதலை கடந்திட முடியாது தவித்தேன்

உன் சாயலில் ஒருத்தி
உலாவும் தெருவில்
பின்னே தொடரும்
பித்தனாய் ஆனேன்.

என் உள்ளத்தை
சலவை செய்தே பார்கிறேன்
கறையாய் படிந்த உன் உருவ அழகை
போக்கிட என்னால் முடியவில்லை.

என்றுமே உன் நினைப்பை
விரும்பியே நான் சும்ப்பேன்
என்றாவது ஓர் நாள்
உன் மூளையை சலவை செய்

அன்று என் தூய்மை
நீ உணர்வாய்
அதுவரை எனக்கான தனிமை
தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

Nada Mohan
Author: Nada Mohan