பாலதேவகஜன்

அழியாத கோலங்கள்

மரணப் படுக்கையிலும்
மனம் உடையாதவளாய்
மகனே! என்ற பாசக்குரலாள்
நாடி அடங்கிப்போன கோலம்
நனைத்ததே கண்களை ஈரம்.

உயிர் தங்க இடம் தந்தாய்
உடல் வளர உதிரம் தந்தாய்
மனம் மகிழ அன்பு தந்தாய்
உன்தமான பாசமும் தந்தாய்.

வரமாய் எனையே நினைந்து
வளமாய் என்னை வளர்த்தாய்
நீயே எந்தன் உலகாய் என்
நெஞ்சினில் பதியவும் வைத்தாய்

உன்னை பிரிந்து நானோ
எப்படி வாழ்வேன் தாயே!
இப்படி வாழ்வே வேண்டாம்
உன் மடி தந்தால் போதும்.

வானம் பார்த்த நிலமாய்
உனையே பார்த்திருக்கேன்
வானம் சிந்தும் நீராய்
என் கண்களும் சிந்துதே
உன் நினைப்பால்

நாளும் உனையே நினைத்து
நானோ வாடிப் போனேன்
வலிகள் சூழ்ந்த என்னை
ஆற்றிட எவருமே இல்லை

போற்றி நின்றவரோ
கருணை காட்டவுமில்லை
நாடி பார்த்தவரோ
நம்பிக்கை தரவுமில்லை.

காலன் பறித்தது எனதுயிரை
என்ற உண்மையை
உணர்ந்த்திய காலமதை
கடந்திட என்னால் முடியவில்லை

கண்ணீருக்கோ ஏதும் ஓய்வுமில்லை
என் காவலுக்காய் இன்று எவருமில்லை
காலம் என்னை அழைக்கிறது
கனதி வாழ்வில் நுழைக்கிறது

மகிழ்வாய் வாழ முடியவில்லை
மனமோ இன்னும் ஆறவில்லை
என் மனம் நிறைய நீயிருக்க
வேறெதையும் நிறைக்க முடியவில்லை

வறுமை காட்டாது என்னை
செழுமையாய் வளர்த்தவளே!
உன் பெருமை சொல்ல
இந்த ஜென்மம் போதாதே

அருமையான தாயே!
உனக்கான தேவைகள்
அத்தனையும் தள்ளிவைத்து
எனக்காகவே வாழ்ந் தாயே!

உனக்கான தேவைகளை
தீர்க்கும் திடம் பெற்றுவிட்டேன்
என் தாயே! எழுந்து வா!
உனைக்காக்கவே நானிருக்கேன்.

உத்தமியே!
உனையெண்ணி வாழ்தலன்றி
எனக்கு வேறு எண்ணமில்லை
உன் நினைப்பே போதுமம்மா
என் உயிர்வாழும் வரையிலம்மா.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading