பாலதேவகஜன்

சூர வதை

கந்தா! கடம்பா!
வேல் முருகா!
கதிர்காம நாதா!
வேல் அழகா!

சூர சங்காரா!
வேல் முருகா!
சுப்ர மணியனே!
வேல் அழகா!

தேவரை காத்திட
அவதரித்த
மாயோன் மருகா!
வேல் அழகா!

ஆற்றிட முடியா
துயரங்களை
அறவே அழித்தவா
வேல் அழகா!

சூர வதை
சொல்லும் கதை
உன் வீரமதை
காட்டுதையா!

பேரிடரை போக்குதற்கு
போர்குணமே!
பொருத்தமென்ற
தத்துவத்தை காட்டியவா!

உனைப்போல ஒருவன்
எங்களுக்காய் பிறந்தான்
எம் உணர்வெல்லாம் அவனே!
உன் சாயலானான்.

அசுரர் குல ஆணவத்தை
அடக்கி நின்ற ஆறுமுகா!
ஆறுபடை வீடமைத்து
அடியவரை காத்தவா!

மாயை பெற்ற மைந்தனுக்கு
மரண பயம் காட்டியவா!
மாய வித்தை அத்தனையும்
வேல் கொண்டு அழித்வா!

ஈழத்தாய் பிள்ளைகளை
ஏனையா நீ காக்கவில்லை
கோவில்கள் கட்டி
கொண்ட பக்தி போதாதோ?

காவலனாய் நீயென்று
காலம் காலமாய்
காத்திருந்த எங்களின்
கருவறுத்து விட்டாயே

தேவர்கள் பட்ட குறைக்கு
மேலாக நாங்கள் பட்டோமே
தீராத எங்கள் வலிக்கு
தீர்வொன்று தர மறுத்தாயே

சூரனை நீ வதம் செய்தாயா?
சூரன் உந்தன் கருணையை
வதம் செய்தானா?
என்ற சந்தேகம் எங்களுக்கு.

தேவர் குறை தீர்த்துபோல்
எங்கள் குறை தீருமையா
வாழுங்காலம் அத்தனையும்
வலியின்றி நாம் வாழ்ந்திடவே.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading