தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

புதிய வாழ்வு

கெங்கா ஸ்ரான்லி

புத்தாண்டு பிறந்தது
புதியமகிழ்ச்சி உலா
மக்கள் மனதில்
மிக்க மகிழ்ச்சி
பழைய சோகம் களைந்து
புதிய உதயம் தோன்றுகிறதென
ஆரவாரம் அள்ளி வழங்க
சோமவாரம் மெல்ல நகர
தைத்திங்கள் பிறந்தது
தைமகளும் வந்துவிட்டாள்
தரணியெல்லாம் மகிழ்ச்சி
தனம் தானியம் அள்ளி வழங்கிடுவாள்
அல்லலின்றி தொல்லையின்றி
அகமகிழ்வாய் வாழலாம்
அன்பு பெருகிட
ஆசை அருகிட
சுற்றம் சேர குதூகலமாக
சேர்ந்து வாழலாம்
இப்படி எத்தனை எத்தனை
வண்ணக் கனவுகள்
கனவு மெய்ப்படுமா
மெய்ப்பட வேண்டும்
எண்ணங்கள் கனியவேண்டும்
வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும்
இயற்கை உதவ வேண்டும்
உழவரும் சேற்றில் கால்வைக்க வேண்டும்
மக்களும் பசி பட்டினி இன்றி வாழவேண்டும்
புதிய ஆண்டில்்
புதியபாதை தெரியவேண்டும்
தடைகள் எல்லாம் விலக வேண்டும்
புதியவாழ்வு மலர வேண்டும்
மாந்தரும் மனம் மகிழவேண்டும்!
சோகம் களைந்து
தாகம் விடுத்து
புதியவாழ்வு சிறக்க வேண்டும்!

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading