தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

பூக்களின் புது வசந்தம்

வசந்தத்தின் வைகறையின் எழிலை
வார்த்தைகளுள் அடக்கி விடல் தகுமோ
வர்ணத்தின் எழிலையெல்லாம் பரப்பி
எழுதி வைத்த பேரழகுன் விரிப்பே

கண்களுக்குள் வியப்பூட்டும் அழகு
கச்சிதமாய் விதைத்தெழுந்த செழிப்பு
பச்சை வயல் மீதிலெல்லாம் பரந்து
பருவத்தின் மொழியெழுதும் கவிதை

அறிவியலின் ஆற்றலுக்கும் சவாலாய்
இயற்கை மகள் நெய்தெழுதும் படைப்பு
தேன் கவரும் வண்டினங்கள் மொய்க்க
காந்தமென கவர்ந்தெழுதும் வசந்தம்

ஒரு நாளில் ஒரு பொழுதில் மடியும் ஆனாலும்
அதனுள்ளே மகரந்த சேர்க்கை
குதூகலத்தின் மொழியெழுதும் காதல்
மலர்தூதெழுதி உயிர் மூச்சை தொடுக்கும்

வசந்தத்தின் பெருஞ்செய்தி எடுத்து
வானமகள் பைப்பிடித்தே மலர்ந்து
பெருமகிழ்வை விழிகளுக்குள் தொடுக்கும்
மலரவழின் எழில் வதனம் பேரழகே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading