17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
பூம்பனி கொட்டுது
நகுலா சிவநாதன்
பூம்பனி கொட்டுது
பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது
தேம்பியே அழுகுது வானம்
வானமும் கறுக்குது வையகம் பொழியுது
வண்ணமாய் இருக்குது காலை
நிறைபனி பொழியுது நிலமும் மூடுது
நீண்ட நேரம் இருளாக
வெள்ளையாய் கொட்டுது வெண்பனிச்சரால்
துள்ளியே மகிழுது தூரத்து விடியல்
அள்ளியே கையில் வைத்திட நாமும்
அகன்று செய்லுது பனியின் துகள்கள்;
கிள்ளி எறிந்திடும் மாணவமணிகளும்
துள்ளி விளையாடுவர் தூசிப்பனியில்
இயற்கையின் விந்தை இதுவென நாமும்
இணைந்து வாழ்தல் நலமன்றோ!
முயற்சியைக் கூட்டி முனைந்து நீயும்
முன்பனிக் காலை விடியலைப் பாரு!!
நகுலா சிவநாதன்1843
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...