பொங்குவாய்

குட்டக் குட்ட குனிந்தே கிடப்பதா
முட்டுக் கொடுத்தே வாழ்க்கை நகர்வதா
எத்தனை காலம் அடிமைச் சேவகம்
பத்தாதோ பட்டது எங்கேயுன் கோபம்

பிறப்பும் இறப்பும் வாழ்வில் ஒருமுறை
பொறுத்துப் பொறுத்து இருப்பது எதுவரை
சிறுமைப்பட்டே ஆயுளுக்கும் கொத்தடிமையாகிக் கிடப்பதா
பொறுமையேயென்று எழுச்சியின் வாசல்களை அடைப்பதா

ஆண்டான் அடிமையென்பதை தலைமுறைக்கும் தொடர்வதா
பூண்டோடு அதையழித்து அத்தனத்தை விடுவதா
பொங்கியெழு வேண்டாமினி கும்பிடும் சீவியம்
மங்கியே மறையட்டும் அடிமையின் காவியம்

ஜெயம்

17-12-2025

Author:

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading