தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

பொங்குவாய்

சிவாஜினி சிறிதரன்
சந்தகவி இலக்கம் _216

“பொங்குவாய்”
தை திங்கள் வந்ததடி தோழி
தரணிமெல்ல மகிழ்ந்தடி
ஆதவனார் வந்தாரடி!

பொங்கலிட்டோம்
பூஜை இட்டோம்
புது நெல்லில் படைத்து நின்றோம்!

புத்தம் புதுமலராய்
நித்தம் நித்தம் மலர்ந்து வரும்
ஆதவனின் வருகை
பாரெல்லாம்
ஒளி கூட்டும்!

பொங்கலோ
பொங்கலேன்று வையகத்து மாந்தரெல்லாம்
புதிய பானை பொங்கலிட்டு பொங்கிடுவாய்!

வாழ்வாங்கு வாழ்ந்திடவே
பொய்யகற்றி மெய்யுணர்ந்து தாழ்பணிவோம்
ஞான ஒளி தரும் ஆதவனை!

வறுமை பகைமை வஞ்சகம் நீக்கி
உறவுகள் உயர்ந்து
பண்டம் பலவும் நிறைந்து
இல்லறம் இனிக்க
இன்பம் பெருகிட
இனிதே பொங்குவாய்!
நன்றி

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading