முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

போர் என்னும் அவலம் 754 19.03.2026

செல்வி நித்தியானந்தன்
போர் என்னும் அவலம்

வல்லரசு என்ற போர்வை
வந்ததே இன்று பார்வை
வறுமை பஞ்சம் பட்டினி
வலியானதே பலரது நிலமை

வர்த்தகம் என்பது வியாபாரம்
வஞ்சித்து அடிப்பது அநியாயம்
வயிற்றுப் பசிக்கு வழியேது
வசதியற்றவர் புசிக்க நிலையேது

ஆயுத விற்பனை ஒருபுறம்
ஆதரவு சேர்க்கும் மறுபுறம்
ஆட்சி ஆலோசனை பயனேது
ஆதிக்கம் காட்டுவதால் அழிவுதானே

நிம்மதி இல்லா பலரது வாழ்வு
நிழல் போல் தொடரும் யுத்தம்
நித்தம் பலரது அழுகை சத்தம்
நீட்சியா நீங்குமா புரியாத விடியல்

Author:

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading