மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

மதிமகன்

சம்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 266
21/05/2024 செவ்வாய்
நிர்மூலம்
————-
தூங்காத அவர் விழிகள் ..
தூங்குகின்ற வேளையிலே..
ஆங்கார வெறிகொண்டு .,
அழித்தீரே அவரிடத்தை!

இறப்பின் பின் எல்லோரும்,
இறையாவார் என்றறிந்தும்,
மறத்தமிழர் அவரிடத்தை..
மாசாக்கி அழித்தது ஏன்?

வித்துடல்கள் புதைத்த..
விளை நிலத்தை உழுது..
புத்தனின் போதனையை..
புஸ்வாணம் ஆக்கினரோ!

மாங்காய் உருவம் கொள்..
மாணிக்க துவீபத்தின்….
பாங்கற்ற இச்செயலால்..
பரிகாசம் நீர் கொண்டீர்!

புதைத்த அவருடல்கள்..
புத்துயிர் பெறுமென்றா..
நினைவிடத்தை நீரழித்து..
நிர்மூல மாக்கி விட்டீர்?

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan