மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:285
05/11/2024 செவ்வாய்
அழியாத கோலங்கள்
——————————-
மின்னலுடன் இடி மழையும்
மேகமே அதிரும் நிலையும்
சன்னம் பறந்திடும் ஒலியும்
சாவா வாழ்வா எனும் வலியும்!

கன்னை கன்னையாய் பிரிந்து
கயவருடன் போரிட்டு முடிந்து
பின்னை தம்மிடை போரிட்டு
புறணி சொல்லி மண்டியிட..!

தென்னை பனைதனை விட்டு,
தெற்கு வடக்காய் புறப்பட்டு..
தன்னை, தன்னுள்ளே ஒறுத்து,
தானியங்கி யந்திரமாய் கறுத்து.!

இந்திரலோக வாழ்வு கண்டும்,
இன்றும், தான் பிறந்த மண்ணும்..
சுந்தரனாய் பாதுகாத்த கண்ணும்
சுகமாய் வாழவேண்டி எண்ணும்..!

பந்தமிகு பாசமுயிர் வாழும்வரை
பரந்தமன நல்லவர் உள்ளவரை,
அந்தமென ஒன்று இல்லாதவரை..
அழியா,நாம் இட்ட கோலங்கள்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading