தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:227
04/07/2023!செவ்வாய்
“திருநங்கை”
——————
இறைவன் தந்த அமைப்பு
இதுவும் அவனின் படைப்பு
குறைய வேண்டும் தவிர்ப்பு
குவலயம் காணும் சிறப்பு!

தந்தை தாய்மன வெறுப்பு
தரணியில் நீயேன் கறுப்பு
நிந்தை செய்பவர் முன்பு
நிச்சயம் காட்டுன் எதிர்ப்பு!

ஒதுக்கும் மக்கள் குறைப்பு
ஓரிருவர் மட்டும் நகைப்பு
எதற்கும் காட்டுன் எதிர்ப்பு
எளிதாய் விலகும் தவிர்ப்பு!

முன்னேறிய நாட்டு அமைப்பு
முக்கிய பதவியில் இருப்பு
கண்ணுற்ற வேளை சிறப்பு
கலங்காதே கிடைக்கும் வனப்பு!

உன்னில் என்னவில்லை செப்பு
ஊருக்கு தெரியுமுன் மதிப்பு
எண்ணில், நீதிதான் மறுப்பு
ஏற்றம் கொண்டுவர விருப்பு!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading