நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

சுடர்

திரிதாங்கு சுடரும்
இருளோட்ட உதவும்
பெரிதாகிச் சிறிதாகிப்
பேதமும் காட்டும்

இங்குமங்கும் அலைந்தே
சிறுகாற்றை ஏய்க்கும்
பொங்கிவீசின் சுடரும் பொசுங்கி மாயும்

தொழுவார் முன்னே
சுழன்றாடிச் சுடரும்
பழுது நீக்கிடப்
பரமனைக் காட்டும்

பகலும் இரவும்
பருவம் எதிலும்
நிகழுமே மங்களம்
அமங்கலம்

அதில்வந்து சுடரும்
அமரும் இடம்கண்டு

சுடரை நோக்கின்
சுவறும் ஞானம்
இடரைப் போக்கிட
இயற்றிடு ஒளித் தியானம்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

    Continue reading