மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

அழியாத கோலம்

தனித்தியங்கும் வன்மை-பிறமொழிகளுக்கும்
தாயாகும் தன்மை
கொண்டதோ தொன்மை
கண்டதோ கடைந்துயரச் சங்கம்
பூண்டதோ இலக்கண இலக்கிய அணிகலங்கள்
வெல்வதோ பிறமொழித் தாக்கமின்மை

செல்வதோ நடுநிலமைவழி
சேர்ப்பதோ உயர்விழுமியநெறி
பேணுவதோ இலக்கியமொழிக் கோட்பாடு

காணுவிதம் காட்டினாள் தமிழன்னை
பூட்டினர் அறிஞர் செம்மொழி மகுடம்தனை

வாழ்வுக்கே இலக்கணம் அமைத்த மொழி
வாழ்வாங்கு வாழ்வதற்கே வாழும் ஜீவநதி

இலக்கண இலக்கியச் செழுமை
இயலிசை நாடக முறைமை
இங்கிருக்கும் ஏனைய
மொழிகளுகில்லை அந்நிலமை

அகம்புறம் அறம் -அதை
அள்ளித் தரும் விதம்
நிதம் கற்கத் தூண்டும்
இதபதம் சுகம் அண்டும்

ஒரெழுத்துக்கு ஒரொலி
ஒவ்வாமை கழற்றும் இலகுவழி
சீரியக்கத்துக்காய் உயிர்மெய்க் கூட்டெழுத்து
இருநூற்றி நாற்பத்தியேழு

கற்பது எளிது
காண்பதோ நுண்மை
கண்டோம் தமிழதன் உண்மை

தமிழே சொற்களின் சுரங்கம்
சொற்போர் அரங்கம்

சிரஞ்சிவியாய் வாழும் தமிழ்மொழி
அறஞ்சீவுவார்க்கு அனலெறி மொழி
கரங்கூப்புவார்க்குக் கன்னல் மொழி

அலங்கோலமல்லத் தமிழ்
அங்ககீனமுடையதல்லத் தமிழ்
அலங்காரமே தமிழ்
அழியாதகோலம் கொண்டதே தமிழ்
அடிக்கடி நீயுமதை உமிழ்
அடுத்தவன் மொழி
ஆர்ப்பரிப்பைக் கவிழ்

மனோகரி. ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading