மறக்கதுதான் முடியுமா 769 09.07.2026

செல்வி நித்தியானந்தன் மறக்கதுதான் முடியுமா

திட்டமிட்ட கொலைகள்
திரண்ட தமிழினத்தை
தீக்கிரை யாக்கியும்
தீத்துக் கட்டியதே
கத்திகோடரி துப்பாக்கி
கனத்த ஆயுதங்களாய்
கொலை கொள்ளை
கொன்ற காடைத்தனம்
பதின்மூன்று இராணுவம்
பரிதாப மரணமாய்
பாதையின் இருபக்கமும்
பயத்தில் வெறிச்சோடியதே

பலஆயிரம் மக்கள்
துடிக்கதுடிக்க எரிப்பு
கடைகள் வீடுகள்
உடமைகள் அழிப்பு
எத்தனை ஆண்டுகள்
ஏக்கமான நினைவு
எண்ணிப் பார்க்கையில்
மறக்கத்தான் முடியுமா

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading