மாவீரச் செல்வங்களே 77

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-11-2025

மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!
கார்த்திகை பிறந்தாலே
கனக்குது மனங்களும்

வலியின் வடுக்களும்
வேதனையாய் புரளுதே
கடைசி நிமிடத்தில்
களம் ஆடுகையில்

மனதில் தோன்றியதேதுனக்கு
மண்ணா? மனையாளா?
பெற்றவரா? பேரர்களா?
கூடவே பிறந்தவரா கூடித் திரிந்தவரா?

குமுறி அழுதாயா?
சொல்ல ஏதும் நினைத்தாயா?
சொல் இழந்து தவித்தாயா?
யாது துணிவு உனக்கு?

செந்தமிழ் ஈழத்திலே
செங்களமாடிய மாவீரச் செல்வங்களே
கனவுகள் பலிக்கட்டும்
காலம் கடந்தாலும் ஜெயிக்கட்டும்

செங்காந்தாள் மலரெடுத்து
தொழுது நாமும் மண்டியிடுவோம்.

Jeba Sri
Author: Jeba Sri

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading