மிளகாய் 743 18.12.2025

மிளகாய் செல்வி நித்தியானந்தன்

காய்கறிகளில் ஒன்றாய்
காரத்தை அதிகரிபாபாய்
தரத்திலும் வேறுபாடாய்
தாவர இனமாய்

உணவின் பயன்பாடாய்
உலகில் பவனியாய்
மருத்துவ குணமாய்
மாறியும் உள்ளாய்

இனத்தில் பலபெயராய்
இனிப்பாய் காரமாய்
இறக்குமதி ஏற்றுமதியாய்
இந்தியா சிறப்பாய்

ஊட்டச்சத்து இருப்பாய்
உருவத்தில் மாற்றமாய்
உலகிலே நூற்றுக்கணக்காய்
வடிவம் வண்ணம் சுவைகளாய்
வரலாற்றை கணிக்குமே

Author:

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading