மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

மூத்தோர் 104

ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025

நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர யாருளர்
எமக்கும் தந்து எம்மை உயர்த்துவீரே

பழுத்த இலையாய் பாரினில் வீழ்ந்து
விழுந்த இடமே விதையாய் எழுந்து
உலகின் பெருமை உணர்த்தும் ஒளியே
மலரின் அழகாய் மலர்ந்து வரவே

காலத் தழும்புகள் காட்டும் கதையோ
ஞாலம் தரும் நல் முகவரியோ
முகமலர்வு கொண்டு பேணிக்காக்க
நகல் போல் நம்பிள்ளை தொடருமே

முதியோர் கதை மௌனமாய் உறங்க
மதிப்போர் வாழ்வு மலர்ந்து விளங்க
மூத்தோர் போற்றி வணங்கி வர
புத்தகங்கள் தேவையில்லை எமக்கே

Jeba Sri
Author: Jeba Sri

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading