மூப்பு

ராணி சம்பந்தர்

மூப்பு வந்தாலே மாந்தரின்
இனிமையான இளமைக்குப்
பெரியதோர் ஆப்பு

இறப்பு ,பிறப்பு ,இளமை ,
முதுமை ,நரை இவையோ
இறைவனின் தீர்ப்பு

வயது போகப்போக அது இது
என எதைக் கண்டாலும் ஒரே
வெறுப்பு தம்மிலும் தவிப்பு

எப்போது எது நடக்கும் என்பது
யாருக்கும் தெரியாத ஒன்று
இரு துணையில் ஒருவரது
இழப்பு பெரியதோர் பாதிப்பு

இதுவோ ஒருவரை ஒருவர்
கொல்லும் தனிமையின்
பாரியதோர் பரிதவிப்பு

அதுவோ நித்திரையின்றித்
தவிக்க அனைவருடனுமே
பேசப் பழகத் துடிக்குமே
ஓர் உரிமைத் துடிப்பு .

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading