மௌனம்

சொற்களில் அடங்கா இயற்கையின் வனப்பு …
பாக்களில் அடங்கா பூவையின் வனப்பு ….
மேற்கோளில் அடங்கா நல்மனிதத்தின் வனப்பு…
பாருக்குள் அடங்கா பாமுகத்தின் வனப்பு…

ஏற்றிக்கொடுத்த எத்தனத்தின் ஆற்றல் உயர்வு ….
போற்றிவாழ புகழ்ந்துவாழ
கூற்றின்படி மௌனமே….
ஊமைவிழிகள் உறுத்தும்
காய்ந்தமனம் தூய்மையோ….
உண்மைபேசும் உணர்வும்
வன்மைகொள்ளல் தகுமோ….

தட்டிக்கொடுக்க வெட்டிப்பேச வாய்ப்பாகும் தருணமே……
தரமா…? தாழ்வா… ? தராசும்
இங்கில்லையே….
ஒட்டுக்கேட்டு வேட்டுப்போட
ஒருங்கிணைந்து வாழ்த்துப்போட….
எதுவிரும்பினும் தங்குதடை
ன்றுமே இங்கில்லையே….

அகத்தின் ஆளுமைக்கோர் பயிலும் அரங்கம் ….
பவ்வியமாக வித்தகம் சிறக்க பாலகர் பவனி…
கனவுகள் கனிய வீரம் ஓங்கிட…
இளையவர் சுயஆளுமை பெறுவதும் இத்தளமே….

காலங்கடந்து ஆயிரமாக ஆயிரமாக மாற்றிடமுடியா…
இயக்கும் வாழ்வது மாண்பு மௌனிக்கா அகல்விளக்கே….

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading