அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

யோசி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-32
13-06-2024

யோசி

நாட்டிச் சென்ற நட்பையும்
விட்டுச் சென்ற உறவையும்
தொட்டுச் சென்ற இதயமும்
தீட்டிச் சென்ற ஆசானும்

பெற்றுச் சென்ற பெற்றோரையும்
ஊட்டிச் சென்ற உற்றாரையும்
உயிர் இருக்கும் வரை
யோசி பல முறை யோசி.

பாதையை மாற்றாதே
போதையை கிள்ளாதே
தேவை கண்டு உதவிடு
தெய்வமாய் ஒளிருவாய்

நீதியாய் பேசிடு
நின்று கேட்டு நடந்திடு
உனக்கு நிகர்
யாருமில்லை.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading