மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ரஜனி அன்ரன்

“ கரையும் தண்ணீரில்,நிறையும் கழிவுகள் “கவி..ரஜனி அன்ரன்(B.A)30.03.2023

இயற்கை அன்னையின் கொடையினை
கண்டங்களை ஒன்றிணைக்கும் கடலினை
கப்பல் போக்குவரத்தின் தளத்தினை
கடல் வாணிபத்தின் களத்தினை
வாழ்வின் ஆதார வளத்தினை
கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக்கி
கரையும் தண்ணீரில் கழிவுகளை நிறைக்கின்றனரே !

கடலை ரசிக்க காலாற நடக்க
சுத்தக் காற்றைச் சுவாசிக்க முடியல
தொற்றுக்களும் விரைவில் பரவ
சுற்றுச் சூழலும் மாசடைய
எண்ணைக் கழிவுகளும் நிறைந்து வழிய
நெகிழிகளும் நெளியுது கடலிலே
கழிவுகளினால் அழிவுகளே மிச்சம் !

கடல்வாழ் உயிரினங்கள் அழிய
அரியவகை உயிர்களும் அருகிப் போக
நிறைகின்ற கழிவுகளால் அழிவே
நிலை தடுமாறுகின்றாள் புவித்தாயும்
கண்ணீர் வடிக்கின்றாள் கடல்த்தாயும்
உயிர்நீராம் தண்ணீருக்கு ஊறா?
ஊற்றான நீருக்கும் இங்கு கேடா?
நிறையும் கழிவுகளால் குன்றுதே வாழ்வும் !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading