மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பேராசான் கைலாசபதி “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 06.04.2023

உலகறிந்த தமிழ் அறிஞன்
பல்கலை வித்தகன்
யாழ் பல்கலைக்கழகத்தில்
தலைவராய் கலைத்துறைத் தலைவராய்
துணைவேந்தராய் பணியாற்றிய அறிஞன்
திறனாய்வின் முன்னோடி
பழந்தமிழ் இலக்கிய ஆய்வாளன்
நவீன இலக்கியங்களைப் புடம்போட்ட தீரன்
ஏப்ரல் ஐந்தில் உதித்தாரே !

இலக்கியத்தில் திறனாய்வு செய்து
இலக்கியம் இதழ் கல்வித் துறையென
பரந்து விரிந்தது பேராசானின் பணி
பத்திரிகைத் தொழிலிலும் பதித்தார் கால்
பணியினை ஆற்றினார் தினகரனிலும்
இளங்கலைமாணி முதுகலைமாணியாகி
இங்கிலாந்தின் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில்
கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றாரே !

இலக்கியத் துறைக்கு சேவைகள் செய்து
இலக்கியமும் திறனாய்வும் ஒப்பியல் இலக்கியம்
பண்டைத்தமிழர் வாழ்வும் வளமுமென
இலக்கிய நூல்கள் பலதையும் ஆக்கி
ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு
ஈடில்லா சேவைகள் செய்து
அகவை நாற்பத்தி ஒன்பதிலே
இவ்வுலகை விட்டு ஏகினாரே !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading