ரஜனி அன்ரன்

“ வெறுமை போக்கும் பசுமை “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 11.05.2023

பாரெங்கும் பரந்து விரிந்து
பசுமை உலகினை எமக்குத் தந்து
வெறுமை போக்கி வறுமை நீக்கி
சுத்தக் காற்றைச் சுவாசிக்கத் தந்து
சுற்றுச் சூழலையும் பாதுகாத்து
பொருளாதார மேம்பாட்டிற்க்கும் பங்காற்றி
சாமரம் வீசிடும் தாவரம் வாழ்வின் ஆதாரமே
பிள்ளை போல பேணுகிறான் உழைப்பாளியும் !

உண்ண உறங்க இளைப்பாற
உலகிற்கே பசுமையைத் தரும் தாவரங்கள்
எம் வாழ்விற்கு கிடைத்த மா – வரங்கள்
உலகின் குடையாகி உயிரினங்களின் புகலிடமாகி
உயிருக்கு மூச்சாகி உதரத்தின் பசிபோக்கி
உயிரினங்களை வாழ வைக்கும் தாவரங்களை
உன்னதமாய் காத்து வளர்க்கிறான் உழைப்பாளியும் !

உணவிற்கு ஊட்டச்சத்துக்கு நறுமணத்திற்கு
மருத்துவத்திற்கு மரத்தளபாடங்களுக்கு
அழகிற்கு அலங்காரங்களுக்கு என
அற்புத பலன்களை அள்ளித் தரும் தாவரங்களை
ஆரோக்கியம் பேணி வளர்த்து
பங்கசுக்கள் பூச்சிகள் தாக்காது
பாதுகாப்போம் கடமை உணர்வோடு !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading