ரஜனி அன்ரன்

எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே ! கவி…ரஜனி அன்ரன் (B.A) 08.06.2023

மொழியின் மூலம் எழுத்தே
எழுத்தின் வித்தே மொழிக்கு ஆதாரம்
இலக்கினை நோக்கிய பயணமதில்
எழுத்தோடு பூத்தது முதல்ஒலி
எழிலோடு பதித்தது தடம்
எழுத்தினை விதைத்து வித்தினைப் பதித்து
விருட்சமாகி விழுதுகள் தாங்கி
விசாலமாகி பூத்துக் குலுங்குது தமிழ் !

பாமுகத் தோப்பு பலரது இணைப்பு
இளையவர் தொகுப்பு
இனிமைத் தமிழின் தொடுப்பு
இணைய வழியும் கைகொடுப்பு
இதனால் பல்கிப் பெருகியதே படைப்பு
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழ் !

புலத்திலே பூத்தது எழுத்திலே முதல்ஒலி
பாரெல்லாம் ஒளிருது பாமுக ஒலிஒளி
புலத்திலே தனித்துவம் எழுத்திலே மகத்துவம்
படைப்புக்கள் பலவிதம் ஒவ்வொன்றும் தனிரகம்
அர்ப்பணிப்போ ஆயிரமாயிரம்
ஆக்கங்களின் உருவாக்கமோ பல்லாயிரம்
அத்தனையும் பதியங்கள் ஆகா இதுவல்லோ அதிசயம்
எழுத்திலே பூத்திட்ட எழிலான காவியம் !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading