நாடொப்பன செய்
மரணித்தவனே மறுபடி வந்தால்
ரஜனி அன்ரன்
“ கவி….ரஜனி அன்ரன் (B.A) 08.02.2024
இரண்டாயிரத்தி இருபத்தி நான்கு
தேர்தல் ஆண்டாக மிரள வைக்குது உலகை
உலகில் எழுபத்தியாறு நாடுகள்
தேர்தலை எதிர்நோக்கி காத்திருப்பு
ஜனநாயகம் தான் ஜெயிக்குமா?
மக்களாட்சி தான் மலருமா ?
பொறுத்திருந்து தான் பார்ப்போம் நாமும் !
ஒட்டுமொத்த உலகும் எதிர்பார்த்திருக்க
சர்வதேச ரீதியில் பொருளாதார நோக்கில்
அரசியல் வணிகம் சார்பில்
தேர்தல் திருவிழா களைகட்டப் போகுதா?
போர்த்தாக்கம் பணவீக்கம்
கடன் பிரச்சினைகள் தான் ஒழியுமா?
கனவோடு காத்திருப்போம் நாமும் !
ஒருநாள் மகுடம் சூட
ஒற்றை விரலுக்கு மைபூசி
கற்றையாகப் பணத்தினை வாரியிறைத்து
தேர்தலில் வெற்றி பெறும்வரை
வாக்குறுதிகளை அள்ளிவீசி
வாக்குகளைப் பெற்றுவிட்டு
வாக்குப் போட்ட மக்களுக்கு
வேட்டும் வைப்பார்களே !
எத்தனை தேர்தல் வந்தாலும்
எத்தனை ஆட்சி மலர்ந்தாலும்
தேர்தல் திருவிழா தான் களை கட்டினாலும்
ஏழைகளின் வாழ்வு என்றும் கண்ணீரிலே !
