ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.10.23
கவி இலக்கம் 288
பள்ளிக் காலம்

எல்லையற்ற மகிழ்வு
சொல்லி முடியுமா ?
அந்த இனிய நாட்களின்
நிகழ்வுகள் எழுத இந்தத்
தாள்தான் போதுமா ?

வெள்ளைச் சட்டை போட்டு
இரட்டை பின்னலிட்டு
கறுப்பு ரிபன் கட்டி
வெள்ளைச் சப்பாத்துடன்

பள்ளி போய்த் துள்ளி
அள்ளி வந்த சிவப்பு
மண் எம்மோடு பேசிடுமே

போகும் வழியியில்
புளியங்காய் பறித்து
உண்டதும் நாவற்பழக்
கறை படிந்து பேச்சு
வாங்கியதும் மறக்க
முடியுமா ?

படிப்பிக்கும் போது அங்கும்
இங்கும் பார்த்து அடி
வாங்கிதும் அடிக்கடி கால்
கழுவி நீர் குடித்ததும்
சுகமான சுகமே

விடுதியில் அதிகாலை 4
மணிக்கு எழுந்து சட்டை
தோய்க்கும் கல்லில்
அமர்ந்து கண் தூங்கியதும்
விடுதி முற்றத்தில் தோட்டப்
பயிரிட்டு முதல் பரிசு
வாங்கியதும் ஞாபகமே

பெற்றோர்,ஆசிரியர்
முகம் மலர பரீட்சையில்
முதன்மைச் சித்தி
பெற்றது அளவிட
முடியாத ஆனந்தமுடன்
மறக்க முடியாத
நினைவுகளே .

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading