இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.11.23
கவி இலக்கம் -292
கல்லறை வீரனின் கனவிதுவோ

சொல்லணாத் துயரம்
கல்லறை வீரனின் மௌனம்
ஒரு முறையல்ல பல முறை அவலம்

1956 இல் தொடங்கிய வன்முறை
இன்றுந் தொடரும் பல வழிமுறை
ஆண்டு வந்தவரோ தோண்டிடும்

யுக்தி பேரினவாதியின் கருவறையிலே
வென்றிடும் தமிழ் மந்திரிமாரோ
வயோதிபக் கோளாறு அரைகுறையிலே

இனியும் தொடர் மந்திரம் பாடாது
கனிந்துவரும் காளையரில் கொடுத்திடு
துப்பாக்கி கையில் எடுக்காது

நாவைக் கூர்மையாக்கி அகிலமும்
திரண்ட இளையோரே!
முரண்டு பொங்கி எழுந்திடு

எதிரியுடன் நேருக்கு நேர்
போராடி நய வஞ்சகத்தில்
சிக்கி மீளாத் துயிலும்
வீரனின் கனவிதுவே .

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading